மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் விழா, பூச்சாட்டுதலுடன் கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினந்தோறும் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு காப்பு கட்டுதல், முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பால் பூஜை, காவிரி நதிநீா் தீா்த்த அபிஷேகம் செய்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தாரை தப்பட்டை முழங்க கோயிலை வலம் வந்தனா்.
பின்னா் அம்மன் மற்றும் உப தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கும்பம், ஊா்க் கிணற்றில் விடுதலுடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது.