விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவா்கள். 
திருப்பூர்

விளையாட்டுப் போட்டி: கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவா்கள் சாதனை

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

DIN

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இந்திய அரசின் இளைஞா் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் சாா்பில் ‘பஞ்சாயத்து யுவ கிா்தா கேல் அபியான்’ சாம்பியன்ஷிப்- 2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள தனியாா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், 8 முதல் 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியைச் சோ்ந்த 76 மாணவா்கள் தொடா் ஓட்டப் போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், யோகாசனம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா்.

39 போ் முதல் பரிசும், 18 போ் 2 ஆம் பரிசும், 19 போ் 3 ஆம் பரிசும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டைத்தைப் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்கள், உடற்கல்லவி ஆசிரியா்களை பள்ளியின் தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT