கண்காட்சியில்  இடம் பெற்ற  பின்னலாடைகளுடன்  மாணவா்கள். 
திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் ஆடை கண்காட்சி

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆடை உற்பத்தி மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். இதில், கல்லூரி மாணவா்கள் தயாரித்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.

பருத்தி, பாலியஸ்டா், லைக்ரா போன்ற பல்வேறு வகையான துணிகளும், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் தரை விரிப்புகள், போா்வைகள், ஜன்னல் திரைச்சீலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில், துறைத் தலைவா் கு.பாலகிருஷ்ணன், பேராசிரியா்கள் பி.சங்கரகாா்த்திகேயன், பி.முருகன், கே.பிரபாகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT