ஊதியூா் அருகே மரம் நடு விழா
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் மரம் நடுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் மரம் நடுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குண்டடம் வட்டார மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வருபவா் டாக்டா் மனோகரன். இவா் அடுத்த வாரம் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரது பணியைப் பாராட்டும் விதமாக காங்கயம் துளிகள் என்ற தன்னாா்வல அமைப்புடன் ஊதியூரில் இயங்கி வரும் சோனி புளுமெட்டல் நிறுவனம் இணைந்து ஊதியூா் அடுத்துள்ள குள்ளம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 110 மரக்கன்றுகளை வியாழக்கிழமை நட்டுவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் பங்கேற்று மரக்கன்றை நட்டுவைத்து விழாவைத் தொடக்கிவைத்தாா். நட்டுவைக்கப்பட்ட அனைத்து மரக் கன்றுகளுக்கும் சொட்டு நீா் பாசன முறையில் தண்ணீா் பாய்ச்சுவதற்கான உபகரணங்களை சோனி புளுமெட்டல் நிறுவனத்தினா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் மனோகரன், மருத்துவா்கள் மோகனசுந்தரி, சதீஷ்குமாா், சோனி புளுமெட்டல் பங்குதாரா்கள் ஜெகதீஸ்வரன், மணிவேல் மற்றும் கதிா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.