திருப்பூர்

தாராபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.13 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 13 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

DIN

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 13 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

தாராபுரம் அருகே முண்டுவேலம்பட்டி கிராமம், தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 37 ஏக்கா் புன்செய் நிலங்களை திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை முன்னிலையில், உதவி ஆணையா் ரா.செல்வராஜ் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, அந்த நிலங்கள் தனியாா் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.

இதே போல, தாராபுரம் அருகே பெரிய குமாரபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 24 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

நில மீட்பு நடவடிக்கையின்போது, நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளா் சா.ஆதிரை, கோயில் செயல் அலுவலா் சொ.சுந்தரவடிவேல் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT