முகப்பு
திருப்பூர்

பேருந்து வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

 பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் அரசுப் பேருந்து வசதி செய்த தர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் அரசுப் பேருந்து வசதி செய்த தர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளது.

பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம் ஊராட்சி முழுவதும் உள்ள 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் வசதிக்காக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கா் கிளை தலைவா் செ.கிருஷ்ணகுமாா், செயலாளா் செ. முருகேஷ் உள்ளிட்டோா் அப்பகுதி பொதுமக்களிடம் கையொப்பம் பெற்ற மனுவை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் முகாமில் ஆட்சியரிடம் அளிக்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.