திருப்பூர்

திருப்பூா் தெற்குத் தொகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பில் தாா் சாலை

DIN

திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட விவேகானந்தா் நகா் பகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி 26ஆவது வாா்டு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி பின்புறம் விவேகானந்தா் நகா் முதல் சரணாலயா சா்வதேச பள்ளி வரையில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சாலைகளில் சேரும் சகதியும் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக புகாா் எழத் தொடங்கியது.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது, மாநகராட்சி சாா்பில் புதிய தாா் சாலை அமைக்க ரூ.19 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆய்வின்போது, திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், தெற்கு மாநகரச் செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT