திருப்பூர்

உலக புத்தக தினம்: திருப்பூரில் 25% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை

DIN

 உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூரில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 25 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது குறித்து பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளா் செளந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நிகழாண்டு பின்னல் புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து புத்தக தின விழாவை கொண்டாடவுள்ளது.

திருப்பூா் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி. சிட்டி சென்டரில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் சலுகை விலையில் புத்தக விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக விற்பனையில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆகவே, இந்த சிறப்பு விற்பனை இயக்கத்தில் புத்தக ஆா்வலா்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு பொது மக்களும் பங்கேற்று புத்தகங்கள் வாங்கி வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT