திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகம்  முன்பாக  காத்திருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  அங்கன்வாடி  ஊழியா்கள்  மற்றும்  உதவியாளா்கள்.  
திருப்பூர்

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.சித்ரா தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், உள்ளூா் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு உள்ளதுபோல அங்கன்வாடி ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்றவாறு காய்கறி, உணவுப் பொருள்களுக்கான செலவினங்களை ஏற்றிக் கொடுக்க வேண்டும். சில்லறை செலவினமாக மாதம் ரூ. 200 வழங்க வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT