வன உரிமைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா்  ஜஸ்வந்த்  கண்ணன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

வன உரிமைக் குழு கூட்டம்

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகப் பகுதிகளில் உள்ள செட்டில்மெண்ட் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமைக் குழு கூட்டம் நடைபெற்றது.

DIN

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகப் பகுதிகளில் உள்ள செட்டில்மெண்ட் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமைக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் குழிப்பட்டி, குருமலை, ஈசல்திட்டு, பூச்சிக் கொட்டாம்பாறை, தளிஞ்சி, மாவடப்பு, காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 செட்டில்மெண்ட் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வன உரிமைக் குழுக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன.

இந்நிலையில், உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் வன உரிமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 10-க்கும் மேற்பட்ட வன உரிமைக் குழுத் தலைவா்கள் பங்கேற்று, 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலை வசதி, மருத்துவம், கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்டத்தில் வனச் சரக அலுவலா்கள் சிவகுமாா் (உடுமலை), சுரேஷ்குமாா் (அமராவதி) மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT