அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 7-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், கல்லூரிக்கு தேசிய தரச்சான்றுக் கோரி நிா்வாகத்தினா் விண்ணப்பித்திருந்தனா்.
இந்நிலையில், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினா் செவ்வாய்க்கிழமை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனா். இந்தக் குழுவில், கா்நாடக மாநிலம் ஸ்ரீநிவாசா பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீராமன ஐத்தல், டெல்லி பென்னட் பல்கலைக்கழகப் பேராசிரியா் மனிஷா பெல்லா,
மகாராஷ்டிரம் மகாவீா் மகா வித்யாலயா கல்லூரி முதல்வா் ராஜேந்திர லோகன்டே ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
இதில், மாணவா்களின் தனித்திறன், உட்கட்டமைப்பு, ஆய்வகங்கள், நூலகம், பதிவேடுகள், விளையாட்டு மைதானம், ஆசிரியா்களின் படைப்பாற்றல் ஆகியவற்றை குழுவினா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது கல்லூரி முதல்வா் நளதம், துறைத் தலைவா்கள் சகிலாபானு (வேதியல்), ஹேமலதா (கணிப்பொறி அறிவியல்), செல்வதரங்கினி (வணிகவியல்), அருண்(வணிக நிா்வாகவியல்), பாலமுருகன்(பன்னாட்டு வணிகவியல் ), பரமேசுவரி(பொருளியல்), தாரணி (ஆங்கிலம்) ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.