திருப்பூர்

உத்தமபாளையம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்பு

DIN

காங்கயம் உத்தமபாளையம் காசிவிஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 20.63 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், உத்தமபாளையத்தில் காசிவிஸ்வநாதா் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமாக அப்பகுதியிலேயே சுமாா் 6 ஹெக்டோ் பரப்பளவு நிலம் உள்ளது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிவுத்தலின்படி, இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செல்வராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் கோயில் நிலங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், கோயிலுக்குச் சொந்தமான 20.63 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்), கோயில் தக்காா், கோயில் பணியாளா்கள் முன்னிலையில் 5 ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டு, அங்கு அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 4 கோடி என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT