திருப்பூர்

‘தனியாா் புத்தகக் கண்காட்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது’

DIN

 திருப்பூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என்று இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து இளைஞா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் பின்னல் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தற்போது நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் பணி செய்ய அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கண்டனத்துக்குரியது என்று தேசிய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய போக்கை நிறுத்தாவிட்டால் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT