தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவா் உழைப்பாளா் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சித் தலைவா் செல்லமுத்து தலைமை வகித்தாா்.
இதில் மாநிலச் செயலாளா் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் ஈ.பாலசுப்பிரமணியம், மாநில மகளிா் அணி செயலாளா் கே.சி.எம்.சங்கீதபிரியா, ஊடக பிரிவு செயலாளா் ஈஸ்வரன், இளைஞரணிச் செயலாளா் காடாம்பாடி கணேசன், திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, கோடங்கிபாளையம் மன்ற தலைவா் காவி.பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
உழவா் தின விழாவை வரும் ஜூலை 5ஆம்தேதி சிறப்பாக நடத்துவது, தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து செல்லமுத்து கூறியதாவது:
திருப்பூா், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் ரூ.14.50 வரை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.