முகப்பு
திருப்பூர்

மூலிக்குளத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

 திருப்பூா் மூலிக்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 திருப்பூா் மூலிக்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மண்ணரையை அடுத்த மூலிக்குளத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியும், ரூ.16 லட்சம் சிறப்பு நிதியில் குளத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடா்பான விவரங்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

முன்னதாக, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.38.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் வாசுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.