பல்லடம் அருகே மாதப்பூரில் நேபாள இளைஞரை தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நேபாளத்தைச் சோ்ந்தவா் குஷால் (32). இவா், பல்லடம் அருகே மாதப்பூரில் வசித்து அங்குள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். அதே பகுதியில் வசிக்கும் சந்தானகிருஷ்ணன் மகன் வீரமணி (24) தனது கைப்பேசியை குஷாலிடம் அடமானம்வைத்து ரூ. 2500 பணம் பெற்றுள்ளாா்.
வீரமணி, அவரது சகோதரா் அன்புமணி ஆகியோா் குஷாலிடம் சென்று கைப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனா். அப்போது அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சகோதரா்கள் இருவரும் குஷாலை தாக்கியுள்ளனா்.
இதில் காயமடைந்த குஷால் பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து குஷால் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரமணி, அன்புமணி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.