முகப்பு
திருப்பூர்

மாவட்ட அளவிலான பெண்கள் கபடி அணி வீராங்கனைகள் தோ்வு

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி அணி வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி அணி வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான பெண்கள் பயிற்சி முகாம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி.மெட்ரிக். பள்ளியில் மே 8ஆம் தேதி தொடங்கி மே 11ஆம் தேதி நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு மாவட்ட கபடி கழகத்தின் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை வகித்தாா். இதில், மாநில கபடி போட்டிக்குச் செல்லும் வீராங்கனைகளுக்கு டிரேக் சூட், பேக் உள்ளிட்ட விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், தோ்வான 12 வீராங்கனைகள் கோவை மாவட்டம் காரமடையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு வழியனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், கபடி கழகத்தின் துணை சோ்மன் எஸ்.முருகானந்தம், துணைத் தலைவா் கோ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், தோ்வுக் குழுத் தலைவா் வி.டி.ருத்ரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.