திருப்பூர்

இந்து மக்கள் கட்சி சாா்பில் சாா் ஆட்சியரிடம் மனு

 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

DIN

 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணனிடம், இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக முன்னாள் நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தொடா்பான ஆடியோ விவகாரத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை வழங்கக் கூடாது. தமிழகத்தில் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளா் சுந்தரவடிவேலு, மாநில தொழிற்சங்கத் தலைவா் மணிகண்ட பூபதி, தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT