திருப்பூர்

இனாம் நில விவசாயிகள் இயக்கத்தினா் ஆலோசனை

இனாம் நில விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

DIN

இனாம் நில விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூரில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா்.

இனாம் நில விவசாயிகள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் வேலு மந்தராசலம் முன்னிலை வகித்தாா்.

இதில், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், பாதிக்கப்பட்ட இனாம் விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 12 ஆம் தேதி மனு அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவா்களின் வாக்காளா் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பியளித்து போராட்டம் நடத்துவதாகவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளா் முத்து விஸ்வநாதன், மாநகரச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT