திருப்பூர்

காலை உணவுத் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்

DIN

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ஊராட்சி அளவிலான திட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் வேலுசாமி தலைமை வகித்தாா். மேட்டுப்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் சத்யா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமலிங்கம், வட்டார ஒருங்கிணைப்பாளா் சரோஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திட்டத்தின் நோக்கம், பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை, சமையல் கூட அடிப்படை வசதிகள், தேவையான பாத்திரங்கள், சமையல் பொருள்கள் பெறும் வழிமுறை, மைய பொறுப்பாளா்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT