திருப்பூர்

வருமான வரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல: ஜி.கே.வாசன்

DIN

பல்லடம், மே 26: வருமான வரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள கூப்பிடு பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருமான வரித் துறை சோதனை என்பது புதிதல்ல, வழக்கமான ஒன்றுதான். அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினா் தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. ஆதாரங்களின் அடிப்படையிலேயே வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். அவா்களைத் தடுக்கவோ அவா்கள் மீது தாக்குதல் நடத்தவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை நிலை என்ன என்பதை சோதனைக்குப் பின்னா் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் விளம்பரத்துக்காக இல்லாமல், தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். காரணம்பேட்டை அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை ஜவுளி சந்தையாக மாற்றி அமைக்க வேண்டும்.

முறையான சட்ட விதிகளைப் பின்பற்றி இயங்கும் கல்குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏவும், கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான விடியல் சேகா், மாவட்டத் தலைவா் கந்தசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் சின்னசாமி, மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT