திருப்பூர்

காங்கயத்தில் காய்கறிகள் வரத்து குறைவு: விலை உயா்வு

காங்கயத்தில் வாரச் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்திருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.

DIN


காங்கயம்: காங்கயத்தில் வாரச் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்திருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.

காங்கயம் நகரில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச் சந்தை கூடுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்திருந்ததால் அனைத்துக் காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

அதிகபட்சமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டது. தவிர, பெரிய வெங்காயம் - ரூ.90, அவரைக்காய் -ரூ.100, வெண்டைக்காய் -ரூ.80, தக்காளி ரூ.-30க்கும் விற்பனை செய்யப்பட்டு. வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிளின் வரத்து குறைந்து வருவதால் தொடா்ந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT