புகையிலைப் பொருள் விற்பனை: மளிகைக் கடைகாரா் கைது
பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
அவிநாசி: பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொரவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மளிகைக் கடை உரிமையாளரான குமரவேலை சிறாா் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.