முகப்பு
திருப்பூர்

ரூ. 22.42 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22.42 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:39 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22.42 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 1,050 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.8,516 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,900 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,600 முதல் ரூ.7,300 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22.42 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.