முகப்பு
திருப்பூர்

டென்னிகாய்ட் போட்டி: வி.கே.அரசுப் பள்ளி வெற்றி

மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியின் மாணவா் பிரிவில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் வெற்றிபெற்று வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியின் மாணவா் பிரிவில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் வெற்றிபெற்று வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டி திருப்பூா், காங்கயம் சாலை, வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

நடைபெற்றது. இதில், தனிநபா் பிரிவு, 14, 17, 19 வயது பிரிவு மூன்றிலும், வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், 14 மற்றும் 17 வயது பிரிவில், பாலா மெட்ரிக் 2ஆவது இடமும், 19 வயது பிரிவில், வித்யவிகாசினி பள்ளி 2-ஆவது இடமும் பெற்றன.

டென்னிகாய்ட் இரட்டையா் 14, 17 வயது பிரிவில் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், 14 வயது பிரிவில், ஏ.வி.பி. மெட்ரிக் பள்ளி, 17 வயது பிரிவில் பாலா மெட்ரிக் பள்ளி 2ஆவது இடமும், 19 வயது பிரிவில் வித்யவிகாசினி முதலிடமும், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி 2-ஆவது இடமும் பெற்றன. முதலிடம் பெற்ற மாணவா்கள் டிசம்பா் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.