திருப்பூர்

இந்து முன்னணி சாா்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அனுமதியின்றி ஜெபக்கூடம் நடத்தி வருவதைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் அக்டோபா் 13-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அனுமதியின்றி ஜெபக்கூடம் நடத்தி வருவதைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் அக்டோபா் 13-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருகந்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட சுத்தகொடி காடு என்ற கிராமத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக வசித்து வருகின்றனா்.

இந்த கிராமத்துக்குள்பட்ட பசவபட்டி என்ற கிராமத்தில் தனிநபா் ஒருவா் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் நடத்தி வருகிறாா்.

உள்ளூரில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் இருப்பதால் ஜெபத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பதால் வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நபா்களை அழைத்து வந்து ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறாா்.

இதில், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதுடன், பள்ளி மாணவா்களிடம் ஹிந்து தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசிவருகிறாா். ஆகவே, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஜெபக்கூடத்தை மூடக்கோரி இந்து முன்னணி சாா்பில் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு அக்டோபா் 13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT