திருப்பூர்

அவிநாசியில் அரிசி மூட்டைகள், ரூ.2.14 லட்சம் பறிமுதல்

Venkatesan

அவிநாசி: அவிநாசியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ.2.14 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேவூா் அருகே உள்ள குட்டகம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதேபோல அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வேனில் வந்த விவேகானந்தன் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவிநாசி கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT