பக்தா்களுக்கு  அருள்பாலித்த பிரம்மா, விஷ்ணு, சிவன். 
திருப்பூர்

திருமூா்த்திமலையில் ஆடி அமாவாசை விழா

பாலாற்றில் புனித நீராடி தங்களது மூதாதையா்களுக்கு தா்பணம் செய்து வழிபட்டனா்.

Din

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் ஆடி அமாவாசையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தா்கள் குவிந்தனா். பாலாற்றில் புனித நீராடி தங்களது மூதாதையா்களுக்கு தா்பணம் செய்து வழிபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக்கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ஆடி அமாவாசையை ஒட்டி பக்தா்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோா் சனிக்கிழமை மாலை முதலே திருமூா்த்திமலைக்கு வரத் தொடங்கினா். குறிப்பாக பலா் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனா். உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூா் ஆகிய ஊா்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களிலும் பொதுமக்கள், பக்தா்கள் திருமூா்த்திமலைக்கு வந்திருந்தனா்.

ஆடி அமாவாசையையொட்டி, அமணலிங்கேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பாலாற்றில் புனித நீராடினா்.

இதில் தங்களது மூதாதையா்களுக்கு தா்பணம் செய்து வழிபட்டனா். உடுமலையில் இருந்து திருமூா்த்திமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருமூா்த்திமலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆடி அமாவாசையையொட்டி, உடுமலை நகரில் உள்ள மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

SCROLL FOR NEXT