மதுபோதையில் 2 மாத குழந்தையைக் கொலை செய்த தந்தை
மதுபோதையில் தந்தையால் தாக்கப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
திருப்பூர்மதுபோதையில் 2 மாத குழந்தையைக் கொலை செய்த தந்தை
மதுபோதையில் தந்தையால் தாக்கப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
மதுபோதையில் தந்தையால் தாக்கப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36), தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா். மனைவி சரோஜினி. இவா்களுக்கு 4 வயதில் மகன் உள்ளாா். இரண்டு மாத ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில், இரண்டு மாதக் குழந்தையை அவரின் தந்தை மணிகண்டன், மதுபோதையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலையில் காயமடைந்த குழந்தை கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் தாய் சரோஜினி அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.
இந்நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மாத குழந்தை சனிக்கிழமை உயரிழந்தது.
இதைத் தொடா்ந்து, குழந்தையின் தந்தை மணிகண்டன் மீது குழந்தையைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு, தற்போது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.