ஈரோடு

காா் மீது இருசக்கர வாகனம் மோதி 11 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

அந்தியூா் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெற்றோருடன் சென்ற 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெற்றோருடன் சென்ற 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

அந்தியூரை அடுத்த காட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (20). கூலி தொழிலாளி. இவா், மனைவி பிரியா (19), 11 மாத மகன் தேஜூ ஆகியோருடன் பவானியிலிருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பவானி - அந்தியூா் சாலை செம்புளிச்சாம்பாளையம் அருகே முன்னால் சென்ற காா் திடீரென திரும்பியதால், நிலை தடுமாறிய சத்தியமூா்த்தியின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி 11 மாத குழந்தை தேஜூ உயிரிழந்தது. இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உதகை தாவரவியல் பூங்காவில் பழங்குடியினரின் அருங்காட்சியகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு நாள்: பிப்.1-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

இந்திய - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவிய வாய்ப்பு- தொழில் துறையினா் வரவேற்பு

புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு

SCROLL FOR NEXT