பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து முத்தூா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை. 
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைப்பு

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

Din

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவத் துறையினா் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மருத்துவமனைகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

அதன்படி, வெள்ளக்கோவிலில் 21 மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அவசரமில்லா சேவைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால், பல நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனா்.

முதல் அரையிறுதி: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

'ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்' மூலமாக மோசடிகள்! எப்படியெல்லாம் நடக்கிறது?

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!

உன்னத தருணமே💖... நிவாஷினி!

SCROLL FOR NEXT