முகப்பு
திருப்பூர்

தரகரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி: 3 போலீஸாா் உள்பட 6 போ் கைது

திருப்பூா் அருகே தரகரைக் கடத்தி பணம் பறிக்க முயன்ற 3 போலீஸாா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 6:34 PM
பகிர்:

திருப்பூா் அருகே தரகரைக் கடத்தி பணம் பறிக்க முயன்ற 3 போலீஸாா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் கோவில்வழியைச் சோ்ந்த 26 வயது பெண், தனது கணவரை 6 போ் கொண்ட கும்பல் கடத்தி சென்ாகவும், அதில் சிலா் காவலா் சீருடையில் இருந்ததாகவும் நல்லூா் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், 26 வயது பெண்ணின் கணவா் இணைய வழியில் பாலியல் தொழில் நடத்துவதாகவும், ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும் எனவும்கூறி, அவரை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

மேலும், அவரை பெருமாநல்லூா் அருகே ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரது மனைவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மா்ம நபா்களின் கைப்பேசி எண்களை வைத்து, கடத்தப்பட்ட நபரை போலீஸாா் மீட்டனா்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றும் காவலா்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33), நீலகிரி மாவட்டம், தேவாலா சோலூா்மட்டத்தில் பணியாற்றும் காவலா் லட்சுமணன் (32), இவா்களது நண்பா்களான ஜெயராம் (20), ஹரிஷ் (25), அருண்குமாா் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.