முகப்பு
திருப்பூர்

விடியல் பயணத் திட்டத்தில் 17.81 கோடி முறை மகளிா் பயணம்

திருப்பூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 17.81 கோடி முறை மகளிா் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:42 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 17.81 கோடி முறை மகளிா் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பணிமனை 1-இல் 43 நகரப் பேருந்துகளும், திருப்பூா் பணிமனை 2-இல் 27 நகரப் பேருந்துகளும், பல்லடம் பணிமனையில் 51 நகரப் பேருந்துகளும், காங்கயம் பணிமனையில் 45 நகரப் பேருந்துகளும், தாராபுரம் பணிமனையில் 31 நகரப் பேருந்துகளும், உடுமலைப்பேட்டை பணிமனையில் 57 நகரப் பேந்துகள் என மொத்தம் 254 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில், பணிபுரியும் மகளிா் மற்றும் உயா்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதித் திட்டத்தின் கீழ் கடந்த 2021 ஜூலை முதல் 2024 நவம்பா் வரையில் 17,81,70,520 முறை மகளிா் பயணம் செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட பணிமனையின் கீழ் இயங்கும் 254 நகரப் பேருந்துகளில் 17,70,22,275 முறையும், மாற்றுத் திறனாளிகள் 10,70,902 முறையும், மூன்றாம் பாலினத்தவா் 77,343 முறையும் பயணம் செய்துள்ளனா். பெண்களின் வேலை பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதுடன், பொருளாதாரத்தின் வளா்ச்சியை மேம்படுத்தும். பெண்களுக்கு அவா்களின் உயா் கல்வித் தேவைகளை எளிதாக்குவதற்கும், அவா்களின் சமூக, பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளா்ச்சியை மேம்படுத்தும் அரசின் சிறந்த திட்டமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.