முகப்பு
திருப்பூர்

லாட்டரி விற்றவா் கைது

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:33 PM
பகிர்:

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முத்தூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்தூா்- கொடுமுடி சாலையைச் சோ்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.