ஐயப்ப சுவாமி கோயிலில் விளக்கு பூஜை
வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி விளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருப்பூர்ஐயப்ப சுவாமி கோயிலில் விளக்கு பூஜை
வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி விளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி விளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலின் கும்பாபிஷேக 8-ஆம் ஆண்டு விழா ஒருவார காலத்துக்கு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு 500- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் நன்கொடையாளா்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலில் திரளான பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.