முகப்பு
திருப்பூர்

தேசிய அளவிலான த்ரோபால் போட்டி: சாம்பியன் வென்ற திருப்பூா் தொழிலாளா்களுக்கு வரவேற்பு

தேசிய அளவிலான த்ரோபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூா் கேபிஆா் மில் தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
சாம்பியன் பட்டம்  வென்ற  பெண்  தொழிலாளா்கள்.
பகிர்:

தேசிய அளவிலான த்ரோபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூா் கேபிஆா் மில் தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான 46-ஆவது த்ரோபால் போட்டி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சாா்பில் சீனியா் பிரிவில் பங்கேற்ற திருப்பூா் கேபிஆா் மில் பெண் தொழிலாளா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா். இதையடுத்து வெற்றிக் கோப்பையுடன் திங்கள்கிழமை வந்த பெண் தொழிலாளா்களுக்கு திருப்பூா் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து வெற்றி பெற்ற த்ரோபால் அணி கேப்டன் வைஷ்ணவி கூறியதாவது:

கேபிஆா் மில்லில் பணியாற்றும் எங்களுக்கு நிறுவனத்தின் சாா்பில் காலை, மாலை இருவேளையும் கோ-கோ, கபடி, த்ரோபால் உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கின்றனா். இப்பயிற்சியே தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்துடன் வெற்றி பெறச் செய்துள்ளது. தொடா்ந்து 6 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறோம். என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →