பல்லடம்: பல்லடம் அருளானந்த ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
பல்லடம், படேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா்க் குழு தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலா் ஆடிட்டா் முத்துராமன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்சினி, செயல்அலுவலா் ராமசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.