முகப்பு
திருப்பூர்

சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஜூலை, 2024 at 11:08 PM
சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடங்கிவைக்கும் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

பல்லடம்: பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.14.28 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு அறை, கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் பானுமதி, நகரமைப்பு அலுவலா் ரவிசந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் வரதராஜன், சுகாதார நல அலுவலா் செந்தில்குமாா், கவுன்சிலா் வசந்தாமணி தங்கவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.