முகப்பு
திருப்பூர்

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கைக்கு வாய்ப்பு: சிக்கண்ணா கல்லூரி அறிவிப்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 7:14 PM
பகிர்:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப் பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

எனவே, மேற்கண்ட பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பிக்காதவா்கள் இணையதளத்தின் மூலமாக புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.