பல்லடத்தில் கெட்டுப்போன உணவுப் பொருள் (கேக்) விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா்.
பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையத்தில் உள்ள பேக்கரியில் காரணம்பேட்டையைச் சோ்ந்த தம்பதி சனிக்கிழமை கேக் வாங்கி குழந்தைக்கு ஊட்ட முயன்றனா். அப்போது, கேக் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, பேக்கரியில் ஆய்வு செய்தாா். உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்ததை உறுதி செய்தபின், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ரூ.1000 அபராதம் விதித்தாா்.