அவிநாசியில் நன்றி தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். 
திருப்பூர்

அவிநாசியில் விரைவில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Din

அவிநாசி, ஜூலை 19: அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் அவிநாசியில் வெள்ளிக்கிழமை இரவு நன்றி தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது: நீலகிரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட எனக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி.

அவிநாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவசர சிகிச்சைப் பிரிவு, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி, அன்னூா், மேட்டுப்பாளையம் நான்கு வழிச் சாலை அமைக்கப்படும். அவிநாசி பகுதி மக்கள் ரயில் பதிவு செய்ய திருப்பூருக்கு செல்வதைத் தவிா்க்கும் வகையில், தபால் நிலையங்களில் ரயில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே திறக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூட வேண்டும் என்றாா்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT