திருப்பூர்

பழையகோட்டை சந்தை: ரூ.11 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

Din

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகேயுள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 55 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 31 மாடுகள் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.95 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT