முகப்பு
திருப்பூர்

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 ஜூன், 2024 at 9:56 PM
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள்.
பகிர்:

திருப்பூா், ஜூன் 13: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற ஆசிரியா்கள் கூறியதாவது: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையளிக்க வேண்டும்.

ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சை கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபடுகின்றன.

இந்த முறைகேடு தொடா்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் ஊதியத்தில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறையின்படி ஆசிரியா்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.