உடுமலை அரசு கல்லூரியில் கலந்தாய்வு நிறைவு
உடுமலை, ஜூன் 13: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது.
உடுமலை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி முதல் நடைபெற்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் இயற்பியல் பாடப் பிரிவில் 8, வேதியியலில் 3, தாவரவியலில் 1, கணிதவியலில் 4, அரசியல் அறிவியலில் 5, புள்ளியியலில் 5, பொருளியலில் 1, பி.காம் பாடப் பிரிவில் 3, பிகாம் (சிஏ) பாடப் பிரிவில் 3, தமிழ் இலக்கியப் பாடப் பிரிவில் 46, ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 39 என மொத்தம் 118 இடங்கள் நிரம்பின.
கல்லூரியில் மொத்தம் 864 இடங்கள் இருந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் 747 இடங்கள் தற்போதுவரை நிரம்பியுள்ளன.
இன்னும் 117 இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வா் சோ.கி. கல்யாணி தெரிவித்துள்ளாா்.