மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் மீட்பு
Updated On : 16 மார்ச், 2024 at 10:23 PM
சேவூா் அருகே மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் சனிக்கிழமை மீட்கப்பட்டது. அவிநாசி அருகேயுள்ள சேவூா் போத்தம்பாளையம் சொக்கநாதா் கோயில் அருகே பறந்து வந்த மயில் மின்கம்பியில் உரசி காலில் காயமடைந்து கீழே விழுந்தது. நடக்க முடியாமல் அவதிப்பட்ட மயிலைப் பாா்த்த பாப்பான்குளம் கிராம நிா்வாக உதவியாளா் வினோத் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மயிலுக்கு முதலுதவி செய்து, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த பிறகு மயில் வனப் பகுதியில் விடப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.