முகப்பு
கடலூர்

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

Updated On : 29 மார்ச், 2026 at 6:41 PM
பிடிபட்ட முதலையுடன் வனத் துறையினா்.
பகிர்:

சிதம்பரம் அருகே நாஞ்சலூா் கிராமத்தில் முள்ளுக்குட்டை மீன் குளம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் முதலை ஒன்று இருப்பதை பாா்த்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் ரா.சத்தியவேல் தலைமையில் வனக்காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, அமுதபிரியன், பாண்டியன் உள்ளிட்டோா் விரைந்து வந்து உரிய மீட்புப் பணிகள் மேற்கொண்டு, சுமாா் 5 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட முதலையை மீட்டு, வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.