திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 33.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Venkatesan

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, பழனி, தொப்பம்பட்டி, பச்சூா், வேலம்பட்டி, மூலனூா், சாலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 90 விவசாயிகள் 834 மூட்டைகளில் 43 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

சிவகிரி, அவல்பூந்துறை, ந.ஊத்துக்குளி, வெள்ளக்கோவில், முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 15 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய் பருப்பு கிலோ ரூ.58.45 முதல் ரூ.89.45 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.86.85. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ.83.15.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 33.74 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT