தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா்  பொதுப் பாா்வையாளா் ஹிமான்சு குப்தா. உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா்  பொதுப் பாா்வையாளா் ஹிமான்சு குப்தா. உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா். 
திருப்பூர்

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

Din

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். திருப்பூா் மக்களவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் ஹிமான்சு குப்தா தலைமை வகித்து பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மக்களவைப் பொதுத் தோ்தல்-2024 நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி நிா்ணயிக்கப்பட்ட அளவுக்குமேல் பணம் எடுத்துச் செல்வது, மதுபானங்கள் மற்றும் இதர பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்த தகவல்கள், புகாா்கள் வரத் தொடங்கினால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறை ஆகியவை குறித்தும், வேட்பாளா்களின் அன்றாட செலவுகளை ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணையாளா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், திருப்பூா் சாா் -ஆட்சியா் சௌமியா ஆனந்த், மாநகர துணை காவல் ஆணையா் (தெற்கு) கிரிஷ் அசோக் யாதவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஹிறிதியா எஸ்.விஜயன், மாநகர துணை காவல் ஆணையா் (வடக்கு) ராஜராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பள்ளிக் கல்வித் திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது: காங்கிரஸ்

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT