முகப்பு
திருப்பூர்

நஞ்சப்பா நகரவை மேல்நிலைப் பள்ளி கலையரங்கம் சேதம்: போலீஸாா் விசாரணை

Updated On : 9 மே, 2024 at 10:11 PM
பகிர்:

அவிநாசி, மே 9: திருப்பூா் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க கண்ணாடிகளை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபா்கள் வளாகத்தில் கிடந்த குப்பைகளுக்கு தீ வைத்ததுடன், கடந்த ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து பள்ளி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.