முகப்பு
திருப்பூர்

ரூ.9 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

Updated On : 9 மே, 2024 at 9:57 PM
பகிர்:

வெள்ளக்கோவில், மே 9: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.9 லட்சத்துக்கு சூரியகாந்தி விதைகள் விற்பனையாயின.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 21 டன் விதைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் ஒரு கிலோ விதை ரூ.38.40 முதல் ரூ.46.79 வரை விற்பனையானது. இதில் மொத்தமாக ரூ.9 லட்சம் மதிப்பிலான சூரியகாந்தி விதைகள் விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.